பசில் ராஜபக்ச பிரதமர் : மொட்டுவின் திட்டம் அம்பலம்

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தயாராகி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் வகையில் கூட்டணி அமைத்து அதிக அனுகூலங்களை பெற்றுக்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவிற்கு அதிபர் அல்லது பிரதமர் பதவியை பெற்றுக்கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் நாடு முழுவதும் 2500 அரசியல் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.