ஜனாதிபதி ரணிலை தனியாக சந்தித்து பேசினார் பசில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.நாட்டின் தற்போதைய நிலைமை, அரசியல் அமைப்பு மற்றும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்ஷ நாட்டிற்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதியை சந்திப்பது இதுவே முதல் தடவை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இருவருக்குமிடையில் மாத்திரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.