இலங்கையை மீள எழுப்ப போகும் வாழைப்பழம்..! புதிய திட்டம் ஆரம்பம்

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களின் முதலாவது தொகுதி சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய புளி வாழைப்பழங்களின் முதல் தொகுதி எதிர்வரும் 26ஆம் திகதி டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

12,500 கிலோ புளி வாழைப்பழத்தை டுபாய் சந்தைக்கு விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராஜாங்கனை பகுதியில் பயிரிடப்பட்ட வாழைத்தோட்டத்தில் பெறப்பட்ட அறுவடை வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் வகையில் அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கில் ராஜாங்கனை புளி வாழைத் திட்டம் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கவனிப்பாரற்ற கிடந்த வாழைப்பழங்கள் இன்று நாட்டுக்கு டொலரை ஈட்டிக் கொடுக்கும் பழமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.