மீண்டும் இலங்கைக்கு ஆரம்பமான விமான சேவை : கட்டுநாயக்காவில் மகத்தான வரவேற்பு

இலங்கைக்கு(sri lanka) நேரடி பருவகால விமானசேவையை அஸூர் எயார் (Azur Air) விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் ( இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (AASL) தெரிவித்துள்ளது.

 ரஷ்யாவின்(russia) வெனிகோவில் இருந்து இன்று(06) காலை 10.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தை நீர் வணக்கம் செலுத்தி வரவேற்கும் நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. வருகை தந்த முதல் விமானத்தில்332 பயணிகள் மற்றும் 10 பிற பணியாளர்கள் இருந்தனர்.

ஒவ்வொரு வாரமும் இன்று (11/06) முதல் ரஷ்யாவின் 05 முக்கிய நகரங்களான செயின்ட் பீட்டர்ஸ்பேர்க், க்ரோசன்ஸ்கோ, சோச்சி, டோல்மாச்சேவோ மற்றும் நோவிஸ்பிஸ்க் ஆகிய இடங்களிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக Azure Air இன் இலங்கை முகாமையாளர் மௌரிஸ் டி சில்வா தெரிவித்தார்.

மேலும், இந்த Azure Airவிமானங்கள் கட்டுநாயக்காவிலிருந்து ரஷ்யாவில் உள்ள அந்த இடங்களை அடைய 09.00 மணி நேரம் ஆகும்.அத்துடன் இந்த விமானங்கள் ஏப்ரல் 30, 2025 வரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சேவையை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.