தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமரின் சிலை கண்களை சிமிட்டி, சிரித்துக்கொண்டே தலையை திருப்புவது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஏ.ஐ தொழிநுட்பத்தின் மூலம் ராமர் சிலைக்கு புதிய பரிமாணம் கொடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் நேற்று பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் கோயிலில் பால ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த சிலையை மைசூர் சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்திருந்தார். உலகம் முழுவதும் பேசுபொருளாகவுள்ள ராமரின் சிலை அனைவரையும் கவர்ந்துள்ளது.

இன்று முதல் மக்கள் பார்வைக்கு அனுமதியளிக்கப்பட்டிப்பதால் குழந்தை முகத்துடன் புன்னகையுடன் ஜொலிக்கும் ராமரைக் கண்டு மக்கள் மனம் நெகிழ்ந்தனர்.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராமருக்கு உயிரோட்டம் அளித்துள்ள காணொளி அனைவரையும் ஈர்த்துள்ளது.

இதில், ராமர் சிலை கண்களை சிமிட்டி, தலையை அசைத்து சுற்றி பார்ப்பது போல் உள்ளதால் மக்கள் பார்த்து பரவசமடைகின்றனர்.

மேலும், இந்த காணொளிக்கு கீழ் ஜெய் ஸ்ரீ ராம் என கருத்துக்களை மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சில தவறான காரணங்களும் பயன்படுத்தி வரும் நிலையில் இந்த செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.