வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட 45 வயதுடைய ஒருவர் அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் 100 இற்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்து விற்பனையில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெவ்வேறு பெயர்களில் அவர் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியளித்துள்ள நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி மோசடியான முறையில் குறைந்த விலையில் இவ்வாறு வாகனங்களை விற்பனை செய்வதாகவும் இதுதொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேநேரம் வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் 600 - 700 பில்லியன் ரூபா வரிப்பணத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாக தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்பார்த்த வருமானத்தை ஈட்ட முடியாத பட்சத்தில், வாகன இறக்குமதி வரி வரம்புகளை குறைப்பது குறித்து மத்திய வங்கி கவனம் செலுத்தி வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
இதேவேளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்கில் முன்னதாகவே பணம் செலுத்த வேண்டாம் எனவும், இலங்கை வந்த பின் வாகனங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள், வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், வாகன இறக்குமதி தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஆபத்து தொடர்பிலும் பலரும் எச்சரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.