மஹிந்தவின் இல்லம் மீது தாக்குதல்- முற்றாக தீயிடப்பட்ட சனத் நிஷாந்தவின் வீடு!

மஹிந்தவின் வீரகெட்டிய இல்லம் மீது மக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரியின் வீடும் முற்றுகையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீர்கொழும்பு மீரிகம வீதியில் உள்ள Avenra Garden Hotel ஆர்பாட்டகாரர்களால் முற்றாக எரிக்கப்பட்டு அங்குள்ள உலகின் விலையுயர்ந்த சொகுசு வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு முற்று முழுதாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.