காலி முகத்திடலில் தாக்குதல் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் கண்டணம்

காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினரால், இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டித்துள்ளது.

இது நிறைவேற்று அதிகாரியின், நடவடிக்கைகளால் மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறும் செயலாகும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை, ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் இராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அல்லது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது என்பதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில் சட்டத்தின் ஆட்சி பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தாம் சொந்த விசாரணையை நடத்தப்போவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.