நேற்றைய வன்முறை சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் பலி!

கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் 231 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 218 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு 5 பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.