பிரித்தானியாவுக்குள் கால் வைத்தால் கைது - கடுமையான நிபந்தனையுடன் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம்

சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், அவர்கள் இனி நான்கு நட்சத்திர விடுதிகளிலெல்லாம் தங்கவைக்கப்படமாட்டார்கள்.

மாறாக அவர்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்த படுவார் என அவர் கூறியுள்ளார். மேலும், இனிவரும் வாரங்களில் புலம்பெயர்ந்தோரின் படகுகளை நிறுத்தும் மனு சட்டமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த மனுவில், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் வந்தால், நீங்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட விரோத புலம்பெயர்தல் பிரச்சினையை சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் எனவும் ரிஷி சுனக் சுட்டிக்காட்டியுள்ளார்.