எதிர்ப்பாளர்களும் கிளர்ச்சியாளர்களும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதால் அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதப் போராட்டத்தை தொடங்க திட்டமிடலாம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கைக்கு தேவையானது அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானமே எனவும் போராட்டக்காரர்கள் வன்முறையை கையில் எடுத்தால் அரசாங்கம் அவர்களை நிராயுதபாணியாக்கும் என்றும் தெரிவித்தார்.
அமைதியான போராட்டங்களுக்கு அரசாங்கம் எப்போதும் ஆதரவளிக்கும் என்றும் அவர்களின் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு இடங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் அதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறை நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு கொண்டுவருவதற்கான நடவடிக்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            