தனிப்பட்ட பாதுகாப்புக்கான ஆயுதம் கோரும் அர்ச்சுனா எம்.பி

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள் (pepper spray) மற்றும் மிளகு தோட்டாக்களை கொண்டு வர அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரிவால்வர் வகையிலான இந்த உபகரணம் நீண்ட தூரம் மிளகை ஸ்பிரே செய்யக்க கூடியதாகும் என அதன் தன்மையை குறிப்பிட்டு தான் கொள்வனவு செய்த இதை அனுமதிக்குமாறு கோரி அக்டோபர் 18 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் வீரசூரியவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மிளகு ஸ்ப்ரேக்கள்

அந்தக் கடிதத்தில், இலங்கை சுங்க விதிமுறைகளின்படி இதுபோன்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன் அங்கீகாரம் தேவை என்பதை வாங்கும் நேரத்தில் தனக்குத் தெரியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கோள்காட்டி, தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களில் எம்.பி.க்கு அச்சுறுத்தல் இருப்பதாக இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றும், அது குறைந்தபட்ச ஆபத்து மட்டத்தில் உள்ளது என்றும், அக்டோபர் 23 திகதியிட்ட கடிதத்தில், நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன எம்.பி.க்கு தெரிவித்துள்ளார்.

ஒரு எம்.பி.உயிராபத்து இருப்பதாக நம்பகமான புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்தால், அத்தகைய எம்.பி.க்களுக்கு இலவச துப்பாக்கி உரிமத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான துப்பாக்கியை வழங்குவது குறித்து அமைச்சகம் பரிசீலிக்கலாம் என்று வலியுறுத்தி,

இந்த சாதனங்களைக் கொண்டுவர பாதுகாப்பு அமைச்சின் நேரடி ஒப்புதலைப் பெறுமாறு பதில் செயலாளர் நாயகம் எம்.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.