எந்த ஒரு அயோக்கியனும் கோமாளியும் காலி முகத்திடல் சென்றால் ஹீரோவாகலாம்- விமல் ஏளனம்!

எந்த ஒரு அயோக்கியனும் காலி முகத்திடலுக்கு சென்றால் அவர் வீரன். இவ்வாறு நெருக்கடியில் வீரனாகுபவர் வீரன் அல்ல அந்த நெருக்கடியை தீர்ப்பதே வீரருடைய செயல் என விமல் வீவன்ச தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை அசிங்கப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

தற்போதைய நிலையில் யாரும் பிரபல்யம் அடைய விரும்பினால் கோட்டாகோகம சென்றால் சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று வீதியில் இருப்பவர்களில் அதிகமானோர் மத்திய வர்க்கத்தினர் தான். இன்று அவர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல், சவால் ஏற்பட்டுள்ளது. நெருக்கடிக்கு மத்தியில் ஆர்ப்பாட்டங்களில் வீரனாகுவது பெரிய விடயமல்ல.

எந்த ஒரு கோமாளியும் காலி முகத்திடலுக்கு சென்றால் ஹீரோவாகுவது பெரிய விடயமல்ல. நான் அண்மையில் பார்த்தேன் காவல்துறை அதிகாரி ஒருவர் தேசிய கொடியுடன்  சீருடையில் சென்று வீரக் கதைகள் பேசிக்கொண்டிருந்தார்.

பின்னர் அவர் யார் என தேடி பார்த்தால் 5 கிலோ கிராம் கஞ்சாவுடன் சிக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர். ஒழுக்காற்று விசாரணைகளுக்குள்ளானவர். அவர் அங்கு சென்றதால் வீரனாகிவிட்டார். இவரைப் போன்று இன்னும் சிலரும் உள்ளனர். பெயர்களை குறிப்பிட்டால் அவர்கள் மனமுடைய வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.