அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் பெண் விசேட மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டவர் பொலிஸாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கட்டார் என தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் குனிந்து அசௌகரியமாக இருப்பதைக் அவதானித்த தலைமை நீதிவான், அவரை நேராக நிற்குமாறு கோரியுள்ளார்.
அப்போது, சந்தேக நபர், தன்னை பொலிஸார் கொடூரமாக தாக்கியதாகவும், தனது ஆசனவாயில் ஒரு குச்சியை செருகியதாகவும், அதனால் தனக்கு அசௌகரியமாக இருப்பதாகவும் நீதிபதியிடம் கூறியிருந்தார்.
சந்தேக நபரின் வாக்குமூலத்தை பரிசீலித்த தலைமை நீதிவான், சந்தேக நபரை மீண்டும் அநுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி, தடயவியல் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், சந்தேக நபருக்கு தங்குமிடம் மற்றும் வசதிகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரின் மூத்த சகோதரியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை மார்ச் 17 வரை பொலிஸ் காவலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சஞ்சய ரத்நாயக்க, சந்தேக நபர் தனது சகோதரர் குற்றம் செய்ததை அறியாமலேயே அவருக்கு தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். சந்தேக நபர் வேண்டுமென்றே ஒரு குற்றவியல் சந்தேக நபருக்கு தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி, அவரை பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு அவர்கள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.