அநுர தரப்பு 141 ஆசனங்கள், சஜித் 35 ஆசனங்கள் : முழுமையான தகவல் இதோ


நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்கி அகில இலங்கை ரீதியில் 141 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அகில இலங்கை ரீதியில் 35 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

 காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 406,428 வாக்குகளை பெற்று  7 ஆசனங்களையும்;   ஐக்கிய மக்கள் சக்தி 93,486 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 31, 201 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.  

 ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி 234, 083 வாக்குளை பெற்று  5 ஆசனங்களையும்    ஐக்கிய மக்கள் சக்தி 52,170 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் 1  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 26,268 வாக்குகளை கைப்பற்றி ஒரு ஆசனத்தையும் கைப்ற்றியுள்ளது  

 பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 159010 வாக்குளை பெற்று  4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 43822 வாக்குகளை கைப்பற்றி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 317541 வாக்குகளை கைபற்றி 6 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 74475 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

 மொனராகலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 174730 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 62014 பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.


பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளை கைப்பற்றி 6 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 102,958 பெற்று 2 ஆசனங்களையும் புதிய ஜனநாயக முன்னணி 36,450 ஆசனங்களை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 87031 வாக்குகளை பெற்று 2ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 53058 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும்  புதிய இலங்கை தமிழரசுக் கட்சி 34168 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 181678 வாக்குகளை பெற்று 4ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 53200 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
 
நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 161167 வாக்குகளை பெற்று 5ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 101589 வாக்குகளை பெற்று 2ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 64672 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.    

களுத்துறை மாவட்டத்தில்  தேசிய மக்கள் சக்தி 452,398 வாக்குகளை கைப்பற்றி 8 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 128,932 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி 34,257 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
 
அநுராதபுரத்தில் தேசிய மக்கள் சக்தி 331,692 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதோடு ஐக்கிய மக்கள் சக்தி 98,176 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை பெற்றுள்ளது.

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 32,232 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும்  இலங்கை தமிழரசுக் கட்சி 29,711 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 21,101 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும்   இலங்கை தொழிலாளர் கட்சி 17,710 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும்   கைப்பற்றியுள்ளது.

குருணாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 651,476 வாக்குகளை பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதோடு ஐக்கிய மக்கள் சக்தி 189,394 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

 கேகாலை மாவட்டத்தில் ; தேசிய மக்கள் சக்தி 312,4412 வாக்குகளை பெற்று  7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதோடு ஐக்கிய மக்கள் சக்தி 109,691 வாக்குகளை பெற்று  2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 368,229 வாக்குகளை பெற்று 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதோடு ஐக்கிய மக்கள் சக்தி 133,041 வாக்குகளை பெற்று 3ஆசனங்களையும் பெற்றுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதோடு, இலங்கை தமிழரசுக் கட்சி 63,327 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும்,  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 27,986 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் 1 ஆசனம்,  சுயேட்சைக்குழு இல.17  27855 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
 
புத்தளத்தில் தேசிய மக்கள் சக்தி 239,576 வாக்குகளை பெற்று 6 ஆசனங்கள் கைப்பற்றியுள்ளதோடு ஐக்கிய மக்கள் சக்தி 65,679 வாக்குகளை பெற்று 2ஆசனங்களை பெற்றுள்ளது.

கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 500,596 வாக்குகளை பெற்று 9 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 145,939 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் புதிய ஜனநாயக முன்னணி 50,889 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில்  இலங்கை தமிழரசுக் கட்சி 96,975 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும்  கைப்பற்றியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 898,759 வாக்குகளை பெற்று 16 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 150,445 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 788636 வாக்குகளை பெற்று 14 ஆசனங்களை கைபற்றியுள்ளதோடு, ஐக்கிய மக்கள் சக்தி 208249 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களை பெற்றுள்ளது.
 
திகாமடுல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 146313 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களையும் , இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 468999 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33911 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் இலங்கை தமிழரசு கட்சி 33632 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.