323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டதில் பிரதானமானவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனவும், அடுத்த நபர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் ஆகும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர்
323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டதில் பிரதானமானவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்தது அமைச்சர் பிமல் ரத்நாயக்க.
உண்மையில் பொலிஸார் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உண்மையெனில் இவர்களுக்கெதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களின் வரிப்பணத்தை சூரையாடவில்லை.
எனவே எம்மீது வழக்கு தொடரப்பட்டாலும் தைரியமாக நாம் அதை எதிர்கொள்வோம்.
நாம் எமது சொத்து விபரங்களை சரியாக சமர்ப்பித்திருக்கின்றோம். ஆனால் நீதி அமைச்சர் சமர்ப்பித்துள்ள சொத்து விபரங்களில் அவரது கையெழுத்து இல்லை. எந்தவொரு தவறும் செய்யாதவர்கள் எதற்காகவும் அஞ்சத் தேவையில்லை. நாம் அரசாங்கத்தைக் கண்டு அஞ்சவில்லை.
ஆனால் தவறு செய்தவர்களை கைது செய்யும் போது அது எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது. ஆளுங்கட்சியில் எவரேனும் தவறிழைத்திருந்தால் அவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்றார்.
இதேநேரம் பாராளுமன்றில் நேற்று உரையாற்றி நாமல் ராஜபக்ஷ எம்.பி.
இதேநேரம் பாராளுமன்றில் நேற்று உரையாற்றி நாமல் ராஜபக்ஷ எம்.பி.
தெஹ்ரானில் இருந்து இரண்டு கொள்கலன்கள் ஊடாக போதைப்பொருள் தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை சர்வதேச புலனாய்வு பிரிவு அறிவித்தும் பாதுகாப்பு தரப்பினர் ஏன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
எம்மீது பழியை சுமத்தி போதைப்பொருள் வியாபாரிகளையும், பாதாள குழுக்களையும் பாதுகாக்க வேண்டாம்.
323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்தை அரசாங்கம் மூடி மறைக்கிறது
விடுவித்தவரை கண்டுபிடித்தால் கொள்கலன்கள் இருக்கும் இடத்தை கண்டுப்பிடிக்கலாம். இவர்கள் அரசாங்கத்தில் உள்ளார்கள் ஆனால் நாங்கள் கொள்கலன்களை விடுவித்ததாக எம்மீது பழி சுமத்துகிறார்கள்.
ஆனாலும் விடுவிக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் போதைப்பொருள் இருப்பதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் என்னவிருந்தது என அவர் கேள்வியெழுப்பினார்.