வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு சொகுசு வாகனம் மீட்பு

கிம்புலாபிட்டிய - விமான நிலைய வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து அடையாளம் உறுதிப்படுத்தப்படாத மற்றொரு சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு குற்றப் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வாகனம் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாகனம் கட்டானா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

அரச இரசாயன பகுப்பாய்வு

இது தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், காரை சுங்கத் திணைக்களம் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வுக்கும் அனுப்பி, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், காரின் உரிமை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.