எரிபொருள் விநியோகம் தொடர்பில் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவித்தல்


தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைஇன்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.

எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை என்ற கியூ ஆர் (QR)முறைமைக்கு வாகன வருமான அனுமதி பத்திரத்தை கொண்டு பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கியூ ஆர் முறைமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி குறித்த முறைமை முழுமையாக செயற்படுத்துவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைக்காக, இதுவரையில் 46 இலட்சத்து 91 ஆயிரத்து 149 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 41 லட்சத்து 59 ஆயிரத்து 357 வாகனங்கள் பெட்ரோலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 5 லட்சத்து 32 ஆயிரத்து 571 வாகனங்கள் டீசலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, சகல முச்சக்கரவண்டிகளையும் அந்தந்த காவல்துறை நிலையங்களில் பதிவு செய்து, அவற்றுக்காக அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை ஒதுக்கி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.


எரிபொருள் விநியோகத்தின் போது இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய எரிபொருள் உரிமத்தின் கியூ.ஆர் இலக்கத்திற்கு புறம்பான வகையில் இடம்பெறக்கூடிய முறைகேடுகள் குறித்து இவ்வாறு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைஇன்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.

ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு 

கியூ ஆர் முறைமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி குறித்த முறைமை முழுமையாக செயற்படுத்துவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முறைகேடுகள் பற்றிய புகைப்படங்கள் காணொளிகள் என்பவற்றை 0742123123 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கியூ.ஆர் அட்டைகளுக்கு புறம்பாக எரிபொருள் விநியோகம் செய்தல், போலி கியூ.ஆர் அட்டை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் தொடர்பான தகவல்களை இந்த இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அறிவித்துள்ளார்.