ஸ்டார்லிங் இணைய சேவைக்கான கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..! : ஆச்சரியத்தில் மக்கள்


அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையச்சேவை இலங்கையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் இணைப்புக் கட்டணங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.

குடியிருப்பு மற்றும் வணிக பயனர்கள் என்ற இரண்டு பிரிவுகளில் இந்த கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குடியிருப்பு லைட் திட்டத்திற்கு மாதத்துக்கு 12,000 ஆயிரம் ரூபாய் அறவிடப்படும் எனவும் குடியிருப்புத் திட்டத்திற்கு மாதத்துக்கு 15,000 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், இந்த சேவைக்கான ஸ்டார்லிங்க் ஸ்டாண்டர்ட் கிட் என்ற வன்பொருளுக்கு 118,000 ஆயிரம் ரூபாய் அறிவிடப்படவுள்ளது.

இதனை தவிர வணிகத்திட்டத்தின்படி, 24 ஆயிரம் ரூபாய், 64ஆயிரம், ரூபாய், மற்றும் ஒரு இலட்சத்து 27ஆயிரம் என்ற மாதாந்த கட்டணங்களும், அதற்கான வன்பொருளுக்கு 9 இலட்சம் ரூபாயும் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 இதேநேரம் இலங்கையில் ஸ்டார்லிங்  இணைய சேவைகள் சிறந்து ஆய்வுகளுக்கு பின்னரே முன்னெடுக்கப்படுவதாகலும் இதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கையின் டிஜிட்டல் துறையில் பல நன்மைகளை பெறமுடியும் எனவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்தார்.

இதேநேரம் ஸ்டார்லிங் இணைய சேவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது எக்ஸ் பக்கத்தில் இந்த இணைய சேவையின் உரிமையாளரான எலான் மஸ்க்கிற்கு எக்கஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.


அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது நமது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு வெற்றிப்படி என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கான முன்னேற்றங்கள் குறித்து ஆராய விரைவில் எலான் மஸ்கை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.