ஹமாஸ் அமைப்பினருக்கு பலஸ்தீன தரப்பில் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
ஆயுதங்களை உடனடியாக ஒப்படையுங்கள் என ஹமாஸ் அமைப்பினரை பலஸ்தீனத்தின் அதிகார சபையின் தலைவரான மஹ்மூத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளின் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகின்றோம்.
இதுவரை இவ்வாறு செய்யாதவர்கள், இதை பின்பற்றுமாறு நாங்கள் அழைக்கின்றோம்.
பலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான உறுப்பினராவதற்கு உங்கள் ஆதரவை நாங்கள் கோருகின்றோம்.
எதிர்காலத்தில் காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸ் எவ்வித பங்களிப்பையும் வழங்கக்கூடாது.
ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களை தற்போதைய பலஸ்தீன தேசிய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
எங்களுக்கு வேண்டியது ஆயுதங்கள் இல்லாத ஒரே சட்டத்தின் கீழ், ஒரே ஒரு சட்டப்பூர்வமான பாதுகாப்புப் படையைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த அரசு.
கடந்த 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலையும் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் நாங்கள் கண்டிக்கிறோம்.
போர் முடிவுக்கு வந்த பின், ஜனாதிபதி பதவி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படும்.
தற்போது அதிகார சபையிடம் உள்ள அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, மூன்று மாதங்களுக்குள் ஒரு இடைக்கால அரசியலமைப்பு வரைவை அமைப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்த கோரி இத்தாலியில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
இருப்பினும், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதற்கு முன்பு ஆதரவு தெரிவித்து வந்த அவர் திடீரென்று தனது முடிவை மாற்றியுள்ளார்.
இதற்கு எதிராக இத்தாலி முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பலஸ்தீன ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மோதல்களில் 60 இற்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும், போராட்டங்களின் எதிரொலியால் இத்தாலிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறி