ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் நாடு இருளில்!

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 4 கட்டங்களாக மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.எவ்வாறாயினும் வைத்தியசாலைகள் போன்ற அத்தியாவசிய மற்றும் அவசரகால பொது சேவை பகுதிகளுக்கு மின்வெட்டு அமுலாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் தேவையான எரிபொருளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுஇதன் காரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டின் சில மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.எரிபொருள் இன்மையால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி கட்டமைப்பிலுள்ள இரண்டு மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளது.இருப்பினும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி தொகுதிக்கு தேவையான எரிபொருளை இன்று வழங்குவதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்தது.எவ்வாறாயினும், எரிபொருள் கிடைத்ததன் பின்னர் மின்பிறப்பாக்கிகளை செயற்படுத்துவதற்கு மேலும் சில மணித்தியாலங்கள் எடுக்கும் என மின்சார சபை கூறியுள்ளது.இந்த காலப்பகுதியில் தேசிய மின்கட்டமைப்புடன் இணைப்பதற்கு தேவையான மின்சாரம் இல்லை என்பதனால் நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோக தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.