வெசாக் தினத்தை முன்னிட்டு 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

வெசாக் தினத்தை முன்னிட்டு 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது மன்னிப்பு வழங்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.அபராதம் செலுத்த தவறியமைக்காக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்கள் 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.