இலங்கை தொடர்பில் அமெரிக்க பேராசிரியரின் அதிர்ச்சி தகவல்

இலங்கையின் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் பணவீக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தரவு முற்றிலும் தவறானது என ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இலங்கைப் பணவீக்கத்தை 66% ஆகக் காட்டினாலும், அவரது சுட்டெண்ணின்படி, இலங்கையின் பணவீக்கம் 115% என்ற வரம்பில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கையின் பணவீக்க சுட்டெண்ணின் படி உலகில் ஐந்தாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.