பாதாள குழுக்கள் பின்னணியில் முக்கிய சட்டத்தரணிகள் என அதிரடி குற்றச்சாட்டு


கஞ்சிபானை இம்ரான் மற்றும் கனேமுல்ல சஞ்ஜீவ ஆகிய பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற அவர்களது சட்டத்தரணிகளே காரணம் எனத் தெரியவந்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தற்போது பல்வேறு தரப்பினரின் கைகளுக்கும் சென்றுள்ளமையால், நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவது சவாலான விடயமாக உள்ளது

எனினும் போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலகக்குழுவினரை  முன்பு இருந்ததைவிடவும் தற்போது கட்டுப்படுத்தியுள்ளோம்.

இருப்பினும் போதைப்பொருள், பாதாள உலகக் குழுவினரை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை தாம்  மேலும் தீவிரப்படுத்தியுள்ளோம்.

பாதாள உலக குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.