அதானி குழுமம் வசமாகியது மன்னார் மற்றும் பூநகரி-வெள்ளியன்று கைச்சாத்தானது முக்கிய ஒப்பந்தம்!

இரு பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்காக வடக்கில் மன்னார் மற்றும் பூநகரியை அரசாங்கம் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதுசுமார் 500 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள குறித்த இரு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டதாக அறிய முடிகின்றது.இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்துடன் திருகோணமலை, சம்பூரில் சூரிய மின்சக்தி பூங்காவை அமைப்பதற்கான புரிந்துரணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நிதி அமைச்சில் அதானியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.மேலும் 500 மெகாவாட் மொத்த உற்பத்தி திறன் கொண்ட குறித்த இரு திட்டங்களையும் ஓராண்டுக்குள் முடிக்க அதானி குழுமம் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூன்று முக்கிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திட்டங்கள் இப்போது இந்திய முதலீடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.