ஏழரை மணி நேர மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை -ஜனாதிபதி கோட்டாபய!

நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடன் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் உடனடியாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது.கடந்த செவ்வாய்கிழமை முதல் நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்ட நிலையில்மிக நீண்ட மின்வெட்டு இன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக இன்று காலை 5 மணி நேரமும், இரவில் இரண்டரை மணிநேரமும் என ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இலங்கை மின்சார சபை பெற்றுக் கொள்ளாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் செயலிழந்து ஒரு மாதம் கடந்துள்ளதாக அதேநேரம் செயலிழந்த சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.