வாக்குப் பெட்டிகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை


வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான விபரங்கள் கிடைத்தவுடன் வாக்குப் பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,


கடந்த தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட பல சேதமடைந்த வாக்குப் பெட்டிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றைப் பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம் எதிர்வரும் தேர்தலுக்கான ஆயத்தமாக அதிகாரிகள் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும்.

அடுத்த வாரம் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சந்தித்து மேலதிக ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 16ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு முன்னதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.