இருவேறு இடங்களில் விபத்து : 2 பேர் பலி, 3 பேர் காயம்நாட்டின் இருவேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காயமடைந்துள்ளனர்.
கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நாவுல - அரங்கல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
 
இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
முச்சக்கரவண்டியும், கார் ஒன்றும் மோதியதில் நேற்றிரவு (10) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
 
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நாவுல பகுதியைச் சேர்ந்த 76 வயது பெண் ஒருவரும், 64 வயது ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸாhர் தெரிவித்தனர்.
 
விபத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் இன்று (11) காலை வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் வேனில் பயணித்த 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
படுகாயமடைந்தவர்கள் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளன.
 
விபத்தில் பஸ்ஸ{ம், வேனும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் விபத்து காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.
 
சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.