தொடருந்தில் ஏற முற்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த நிலை

தொடருந்தில் ஏற முற்பட்ட பல்கலைக்கழக மாணவி குறித்த தொடருந்தில் இருந்து தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காயமடைந்தவர் உட்பட்ட 18 பேர் எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த போது, ​​ஹப்புத்தளை தொடருந்து நிலையத்தில் காலை 6.30 மணியளவில் தொடருந்தில் இருந்து இறங்கிய குறித்த மாணவி , மீண்டும் தொடருந்தில் ஏறச் செல்லும் போது அதிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

அவர் கீழே விழுந்தபோது அவரது இடது காலின் மீது தொடருந்து பயணித்துள்ளதால், அவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய மாணவி உடனடியாக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஹப்புத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர் ரத்கம, அரலிய உயன மாவடவில பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவி என காவல்துறையினர் தெரிவித்தனர்.