புலம்பெயர் நாட்டுக்கு வருவதற்காகவே தேர்தலில் போட்டிபோடும் இளம் பெண்!!


தமிழ் தேசியத்துக்கு மாத்திரமல்ல அரசியலுக்கே சம்பந்தமில்லாத ஒரு இளம் பெண் தமிழ் தேசியம் பேசித்திரிகின்ற ஒரு கட்சியில் மட்டக்களப்பு வாகரையில் ஒரு வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த எமது செய்தியாளர்கள், விழுந்தடித்துக்கொண்டு சென்று விசாரித்துப் பார்த்திருக்கின்றார்கள்.

அம்மணி புலம்பெயர் நாடொன்றுக்கு சென்று அகதி அந்தஸ்து கோருவதற்காகவே தேர்தலில் நிற்பது தெரியவந்தது.

இன்றைய தினம் கூட அம்மணியின் தேர்தல் செலவுகளுக்காக அவரது ஓட்டைமாவடி மக்கள் வங்கிக் கணக்கிற்கு அவுஸ்ரேலியாவில் இருந்து 1200,920 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளதாக எமது ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

‘அட நல்ல ஐடியாவாக இருக்கின்றதே..’ என்று நினைத்துக்கொண்டு பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள எமது செய்தியாளர்களை முடுக்கிவிட்டபோது, இந்த அம்மணி போன்று பல அம்மணிகள்- இளைஞர்கள் புலம்பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து கோரும் நோக்கத்துடன் வடக்கு கிழக்கு முழுவதிலும் தேர்தலில் போட்டிபோடுவது தெரியவந்தது.

தேர்தலில் போட்டியிட்டுவிட்டு பின்னர் 'அவரால் அச்சுறுத்தல்..' 'இவரால் அச்சுறுத்தல்...' என்று பொலிசிடம் பதிவைச் செய்துவிட்டு.. புலம்பெயர் நாடுகளுக்கு வந்து அகதி அந்தஸ்து கோர இருக்கின்றார்களாம்.

அம்மணிகளே..ஐயாக்களே.. உங்களது ஐடியா நல்லதுதான்..ஆனால் தமிழர்களை வழிநடாத்தக்கூடிய, நாட்டில் எஞ்சியுள்ள தமிழ் மக்களுக்காகப் போராடக்கூடிய நல்ல தலைவர்கள் உருவாகும் சந்தர்ப்பத்தையல்லவா நீங்கள் களவாடி கபளீகரம் செய்கின்றீர்கள்..!!! 

(..அதுசரி இவர்களுக்கு யாரு 'சீட்' கொடுத்து??)