சாவு பயத்தை கண்ட இளைஞர் - வைரல் வீடியோ




அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் ரீல்ஸ் மோகத்தால் பலவித அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன.
 
அந்த வகையில் சேறு நிறைந்த பகுதியில் ரீல்ஸ் எடுக்க நினைத்த இளைஞர் ஒருவர் குட்டிக்கரணம் அடித்து அதை செய்யலாம் என நினைத்துள்ளார்.
 
அவ்வாறு செய்யும்போது அவரது தலை சேற்றில் மாட்டிக்கொண்டது. தலையை வெளியே எடுக்க திணறிய இளைஞர் கடுமையாக முயற்சித்தார்.
 
இறுதியில் போராடி தலையை வெளியே எடுத்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

--