ஒமிக்ரோன் தொற்றின் அலை எதிர்காலத்தில் நாட்டில் காணப்படலாம்!

கொரோனா வைரஸின் பதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றின் அலை எதிர்காலத்தில் நாட்டில் காணப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்ட இலங்கை குடும்ப வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன இவ்வாறான அலைக்கு முகம் கொடுப்பதற்கும் அதனைத் தவிர்ப்பதற்கும் மக்கள் தங்களைத் தாங்களே முன்னிறுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.உலகின் போக்குகளைப் பொறுத்த வரையில் ஒமிக்ரோன் பல நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்த அவர், எனவே அந்த அச்சுறுத்தல் இலங்கைக்கு விதிவிலக்கானது அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.இருப்பினும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக போதுமான பாதுகாப்பை வழங்குகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.எனவே தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற தகுதியுடையவர்கள் அதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சுகாதார விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியதும் அவசியம் என்று அவர் மேலும் கூறினார். ஒமிக்ரோன் மாறுபாட்டின் ஏழு நோயாளிகள் இதுவரை இலங்கையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.