நியூசிலாந்து அருகே கடலில் நீந்திக்கொண்டிருந்த ஓர்கா திமிங்கலத்திற்கு மிக அருகே குதித்து நீச்சலடித்த சுற்றுலா பயணிக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஓர்கா திமிங்கலங்கள் பெரும்பாலும் மனிதர்களை தாக்காது என்றபோதும், சுற்றுலா பயணி செய்த சாகசத்தால் திமிங்கலம் அச்சமடைந்து அந்த நபரை தாக்கி ஏதேனும் விபரீதம் நேர்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.