மகாராணிக்கு அஞ்சலி செலுத்த இரவிரவாக காத்திருக்கும் இலங்கை தமிழ்பெண்உடல் நலக்குறைவால் காலமான பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த முன் வரிசையில் காத்திருப்பதாக இலங்கையரான தமிழ் பெண்மணி ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மகா ராணியின் உடல் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் எடின்பர்க் விமான நிலையம் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து லண்டன் நகருக்கு எடுத்துவரப்படுகிறது. தொடர்ந்து, ராணியாரின் உடல் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹோலில் நான்கு நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹோல் பகுதியில் ஆயிரக்கணக்கணக்கான மக்கள் ஏற்கனவே ராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரவு பகலாக காத்திருக்க தொடங்கியுள்ளனர். அதில் ஒருவர் இலங்கைத் தமிழரான லண்டனில் வசிக்கும் 56 வயதான வனேசா நந்தகுமாரன்.

ராணியாருக்கு அஞ்சலி செலுத்தவிருக்கும் பொதுமக்களில் தாம் முதல் வரிசையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகம் வழியாக கடந்து செல்கையில், பொதுமக்கள் அஞ்சலிக்கான வரிசை லம்பேத் பாலத்திற்கு தெற்கே தொடங்கும் என கேள்விப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அந்தப்பகுதிக்கு விரைந்த வனேசா, தற்போது முதல் வரிசையில் காத்திருப்போரில் ஒருவர் என தெரிவித்துள்ளார். புதன்கிழமை முதல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹோல் பகுதியில் ராணியாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

இதுவரை நாட்டுக்கு அவர் அளித்த சேவைகளுக்கு, அவருக்கு நன்றி கூற வேண்டும், அதற்காகவே காத்திருப்பதாக வனேசா உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.