பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைத்தமிழர் பலி


பிரான்ஸில் இடம்பெற்ற கார்விபத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் குணசிங்கம் -மோகனராஜன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

இறுதிக்கட்டபோரில் இருந்து தப்பி பிரான்ஸ் சென்ற அவர் பிரான்ஸை சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்ததாக தெரிய வருகிறது.

அத்துடன் இவர் ஒரு முன்னாள் போராளி எனவும் தெரிவிக்கப்படுகிறது.