ரணிலுக்கு வந்த தொலைபேசி அழைப்பு - சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் தற்போது ஏற்படுள்ள நெருக்கடி நிலைக்கு உதவி செய்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் அடிப்படையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிபர் மற்றும் சிறிலங்கா அதிபருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிபர் ஷேக் மொஹமட் பின் சைட் அல் நயான் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதன் போது சிறிலங்காவின் அதிபராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கை எதிர்நோக்கும் சிரமங்களைக் கடந்து நிலையான மற்றும் அமைதியான சூழலை அடைவதற்கும் உதவுவதற்கும் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு அதிபர்களும் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.