அமெரிக்காவில் உருவான புதிய நாடு - குடியேற முண்டியடிக்கும் மக்கள்!


ஒருவர் தனக்கு ஏற்றபோல் சொந்த நாட்டையே உருவாக்கி அதில் குடியேறியுள்ளார்.

உலகம் முழுவதும் பயணம் செய்த அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் தனக்கு ஏற்றபோல் சொந்த நாட்டை உருவாக்கி இருக்கிறார்.

ஸ்லோஜமஸ்தான் குடியரசு எனும் பெயரில் இந்த நாடு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நாடு அமெரிக்காவை சேர்ந்த ராண்டி வில்லியம்ஸ் என்ற நபரால் உருவாக்கப்பட்டுள்ளது.

ராண்டி வில்லியம்ஸ் கலிபோர்னியா பாலைவனத்தில் 11.07 ஏக்கர் வெற்று நிலத்தை 19,000 டொலருக்கு வாங்கி தனக்கு ஏற்ற நாட்டை உருவாக்கி தனி நாடாக அறிவித்துள்ளார்.

இவர் தனது நாட்டிற்கு வைத்துள்ள அதிகாரப்பூர்வ பெயர் "ஸ்லோஜமஸ்தான் மக்கள் குடியரசின் இறையாண்மை தேசத்தின் ஐக்கிய பிரதேசங்கள்" ஆகும்.

புதிய நாட்டை உருவாக்கியுள்ள ராண்டி வில்லியம்ஸ் தன்னை "ஸ்லோஜாமஸ்தான் சுல்தான்" என பிரகடனப்படுத்தியுள்ளார்.

குறித்த நாட்டை உருவாக்கிய பின் ராண்டி வில்லியம்ஸ், அமெரிக்காவிடமிருந்து தனது தேசம் சுதந்திரத்தை பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த நாட்டிற்கு கடவுச்சீட்டு, சொந்த கொடி, நாணயம் மற்றும் தேசிய கீதம் உள்ளது.

ஸ்லோஜ்மஸ்தான் குடியரசில் 500 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் வசிப்பதுடன், 4,500 க்கும் மேற்பட்டோர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

வில்லியம்ஸ் மற்ற நாடுகளுடன் அரசியல் ரீதியான உறவுகளை கட்டியெழுப்புவதில் ஆர்வம் கட்டி வருவதாகவும், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வனுவாட்டு மற்றும் அமெரிக்கா உட்பட அவரது அண்மைய பயணங்களில் 16 வெவ்வேறு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நாடு ஐக்கிய நாடுகளின் சான்றளிக்கப்பட்ட நாடு இல்லை எனவும், இது சிற்றின தேசம் (மைக்ரோனேஷன்) என்று செல்லப்படும் குழுவை சேர்ந்தது எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த நாட்டை தனி நாடாக அறிவிக்கப்படவேண்டும் என வில்லியம்ஸ் கோருகிறார்.