ஆழ்கடலில் கை கால்களுடன் நடந்து செல்லும் அதிசய மீன்

சிலி நாட்டு கடல் நீரில் அரிய வகை 'நடக்கும் மீன்' கமெராவில் சிக்கியது.

இரண்டு கால்கள்., இரண்டு கைகளுடன் இந்த மீன் நடப்பதை கடல் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

சர்வதேச விஞ்ஞானிகள் குழு சிலி கடற்கரையில் கடலின் ஆழத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, ​​அவர்கள் நடக்கும் மீன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட புதிய உயிரினங்களை அடையாளம் கண்டுள்ளனர் என்று 'Voice of America' சமீபத்தில் கூறியது.

இந்த அரிய உயிரினங்கள் கடலின் ஆழமான பகுதிகளை வாழ்விடமாக கொண்டுள்ளன.

ரோபோக்களைப் பயன்படுத்தி பரந்த கடலோரப் பகுதியில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழுவால் இவை கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் அப்பகுதியில், நான்கு புதிய கடல் மலைகளையும் கண்டுபிடித்துள்ளதாக,ஓஷன் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குநர் விர்மணி கூறியுள்ளார்.