கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு இன்று எட்டப்பட்டது


இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை  இலங்கை எட்டியுள்ளது.

அதன்படி இந்தியா, சீனா மற்றும் பாரிஸ் கிளப் ஒஃப் நேசன்ஸ் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ கடன் குழுவுடன் 5.8 பில்லியன் டொலர் கடனுக்கான இறுதி மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை  இலங்கை எட்டியுள்ளது.

இந்த ஒப்பந்தம் இன்றயதினம் இறுதி செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருதரப்பு கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


மேலும் இந்த உடன்படிக்கை இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணத்தை வழங்குவதுடன் அத்தியாவசிய பொது சேவைகளை பேணுவதற்கும் அபிவிருத்தி தேவைகளுக்கான நிதி வசதிகளை வழங்குவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் எனதெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.