யுவதிகளை விற்பனை செய்யும் பிரபல விடுதி..! இலங்கையில் அதிர்ச்சி


கண்டியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட ஹோட்டல் என்ற போர்வையில் பிரபல பெண்கள் கல்லூரிக்கும் அருகில் தகாத தொழில் நடத்தும் விடுதி ஒன்று காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவருடன் 22 வயதுடைய யுவதியொருவர் கண்டி ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இடத்தில் யுவதி ஒருவருடன் அறை வசதி செய்து தருவதற்காக 15,000 ரூபாவிலிருந்து பணம் அறவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமில் ரத்நாயக்க மற்றும் கண்டி காவல்துறை தலைமையக பிரதான காவல்துறை பரிசோதகர் ரசிக சம்பத் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கண்டி காவல்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவின் பிரதான காவல்துறை பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் முகவர் ஒருவரை நியமித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த முகவர் அந்த இடத்திற்குச் சென்று 5,000 ரூபாவை செலுத்தி அறையை முன்பதிவு செய்ததையடுத்து, விடுதியின் முகாமையாளர் முகவருக்கு தொலைபேசியில் அறிவித்து, குறித்த யுவதிகளை விடுதிக்கு அழைத்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முகாமையாளரின் கையடக்கத் தொலைபேசியில் யுவதிகளின் புகைப்படங்களைக் காட்டி, சேவையைப் பெற வருபவர் செலவழிக்கும் தொகைக்கேற்ப யுவதிகள் வழங்கப்படுவதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுற்றிவளைப்பின் போது முகாமையாளரால் அழைத்து வரப்பட்ட யுவதி கண்டி பிரதான பாடசாலை ஒன்றில் பயின்ற 22 வயதுடைய யுவதி என காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த யுவதிக்கு, முகாமையாளர் 10,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்திருந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.