முதலைக்கு எவ்வளவு பலம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். எவ்வளவு பெரிய பிராணியாக இருந்தாலும் தண்ணீரில் முதலையிடம் சிக்கினால் தப்பவே முடியாது.
அந்த வகையில், சமீபத்தில் ட்ரோன் கேமராவை முதலை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. தண்ணீரில் இருந்த முதலையின் அருகே ட்ரோன் கேமரா அனுப்பப்படுகிறது.
முதலையின் அசைவை படமெடுத்து வந்த அந்த ட்ரோன் கேமராவை, பறவை என நினைத்து முதலை ஒரே பிடி பிடித்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.