மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!


சீன எல்லையில் இருக்கும் இந்தியாவின் முக்கிய நகரம் ஒன்று பூமிக்கடியில் புதைந்துகொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த நகரத்தில் இருக்கும் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருவதுடன், வீடுகள் மண்ணுக்குள் புதையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை அந்த பகுதியில் இருந்து வெளியேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் ஜோஷ்மித் நகரமே இவ்வாறு பூமிக்குள் புதைந்து வருகிறது. இந்த நகரம் முக்கிய நகரமாகவும் தங்க நகரமாகவும் பார்க்கப்படுகின்றது.

இந்த நகரம் சீன எல்லைக்கு அருகில் இருப்பதுடன், பத்ரிநாத், ஹேம்குந்த் சாஹிப் போன்ற மதத்தலங்களுக்கு இந்த நகரம் வழியாகவே செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரம் இவ்வாறு தானாகவே பூமிக்குள் புதைவதற்கான காரணம் என்ன என பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் அறிவியல் ரீதியான விளக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய ஜோஷிமத் நகரம் தானாக புதைவதற்கான காரணம் குறித்து வாடியா இன்ஸ்டிடியூட் ஒஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் இயக்குனர் கலாசந்த் சான், மூன்று அடிப்படை காரணங்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், முதலாவதாக நூற்றாண்டுக்கு முன்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டதன் இடிபாடுகளின் மீதே இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக இந்த உத்ரகாண்ட் பிரதேசம் பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்திருப்பது.

மூன்றாவதாக காலநிலை மாற்றம், நிலத்தடியின் கீழ் பாயும் நீரால் காலபோக்கில் கற்களின் பலம் குறைந்தமை எனவும் தெரிவித்துள்ளார்.  

இவ்வாறான அபாய நிலையை எட்டியுள்ள இந்த நகரத்தை முதல்வர் புஷ்கர் தமி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக அவசர ஆலோசனை ஒன்றை மேற்கொள்வதற்காக இந்திய பிரதமர் அலுவலகம் முதல்வருக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளரான பி.கே.மிஸ்ரா, தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் எனப் பல முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜோஷிமத் நகர உயர் அதிகாரிகளும் உத்தரகாண்ட் மாநில உயர் அதிகாரிகளும் காணொளி ஊடாக இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அத்துடன், முதல்வர் புஷ்கர் தமியுடன், இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உரையாடலின் போது, ஜோஷிமத் நகரில் வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை வேறு இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாகவும் விவாதித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரச்னையை தீர்ப்பதற்கு உடனடியாகவும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் ஜோஷிமத் பிரச்னையை தீர்ப்பதற்கு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் குறித்த நகரின் முதல்வருக்கு  பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.