2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்



கருப்பான நாய் ஒன்று 2 ஆண்டுகளில் முழுவதுமாக வெள்ளை நிறமாக மாறிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

சில விசித்திரமான நோய்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு வகையான விலங்குகளிடமும் காணப்படுகின்றன.

 
இவ்வாறு ஒரு வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட நாயின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கறுப்பாக இருந்த நாய் தற்போது முற்றிலும் வெள்ளையாக மாறியுள்ளது.

 விட்டிலிகோ (எவைடைபைழ) என்கிற நோய் பொதுவாக மனிதர்களை பாதிக்கிறது. ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாய், இரண்டே வருடங்களில் கருப்பு நிறத்தில் இருந்து முற்றிலும் வெள்ளை நிறமாக மாறியது.

2021-இல், பஸ்டர் (டீரளவநச) என்ற இந்த நாய்க்கு விட்டிலிகோ இருப்பது கண்டறியப்பட்டது.

விட்டிலிகோ ஒரு தோல் நோய். அதன் தொற்று காரணமாக, மெலனின் உற்பத்திக்கு காரணமான மெலனோசைட்டுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு, தோலின் நிறம் மாறுகிறது. தோல், முடி மற்றும் கண் நிறம் ஆகியவற்றில் மெலனின் முக்கிய பங்கு வகிக்கிறது.

மெலனோசைட் இழப்பு முகம், கைகள், கால்கள் மற்றும் பிறப்புறுப்புகள் உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் வெள்ளைத் திட்டுகள் தோன்றும். இது ஒரு நாள்பட்ட நோயாக இருந்தாலும், உயிருக்கு ஆபத்து இல்லை.

 
வெள்ளை நிறமாக மாறிய இந்த கறுப்பு நாயின் உரிமையாளர் மாட் ஸ்மித், தனது செல்ல நாயின் நோய் குறித்து சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.