வாழைச்சேனையில் வேன் ஒன்றில் பிரயாணித்த ஒருவர் கையடக்க தொலைபேசியில் சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்ததை அடுத்து 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு கொழும்பு வீதியில் உள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் இன்று (சனிக்கிழமை) காலை அக்குரனையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த வாகனம் ஒன்றை நிறுத்தி இராணுவத்தினர் சோதனையிட்டனர்.இதன்போதே, முகமட்பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது கையடக்க தொலைபேசியில் தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையின் படத்தை காட்ட முற்பட்டபோது ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.இதனையடுத்து குறித்த வாகனத்தில் பயணித்த 9 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விசாரணைக்காக அவர்களை வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            