10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற 72 வயதான முதியவர் - யாழில் சம்பவம்


யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற 72 வயதான முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அந்த பகுதியிலுள்ள பலசரக்கு கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு குறித்த சிறுமி தனியாக வந்துள்ளார்.

கடையில் வேறு எவரும் இல்லாத நிலையில், கடையினுள் சிறுமியைத் தள்ளி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த 72 வயதான முதியவர் முயற்சித்துள்ளார்.

அந்த நேரம் அந்த பகுதியால் சென்ற இளைஞன் சிறுமியின் சத்தம் கேட்டு கடைக்குள் வந்து பார்த்த போது வன்புணர்வு முயற்சி தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் முதியவரை இளைஞர்கள் நையப்புடைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.