சிறுமியை பாலியல் சேட்டை செய்த 69 வயதுடைய நபர் கைது

சிறுமியை பாலியல் சேட்டை செய்தமை தொடர்பில்  சந்தேகத்தின் பேரில்   அதிஸ்ட இலாபச்சீட்டு  விற்பனை செய்யும்   நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வீரமுனை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கடந்த  திங்கட்கிழமை (13) இவ்விடயம் குறித்து  சிறுமியின் தாயார்  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய அதிஸ்ட இலாபச்சீட்டு  விற்பனை செய்யும்   69 வயதுடைய நபரை  பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்