மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை கைது!

காத்தான்குடியில் 15 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளார்.பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி 1921 சிறுவர் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளது

இதனையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் குறித்த சிறுமியின் தந்தையாரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.