விசேட பொது மன்னிப்பின் கீழ் ஒரே தினத்தில் 417 கைதிகள் விடுதலை!


நேற்றையதினம் (12) கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் படி அதிபரின் அதிகாரங்களுக்கு அமைய இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களுக்கான அபராதங்களை செலுத்த முடியாத மற்றும் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என தமது கடமை பொறுப்பேற்கும் நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.