400 போதை மாத்திரைகள் - யாழில் 18 வயது ஆணும் 25 வயது பெண்ணும் கைது


போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 400 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் 18 வயதுடைய ஆணும் 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்றும் காங்கேசந்துறை விசேட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காங்கேசந்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர்தெரிவித்தனர்