நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, இராஜாங்க அமைச்சர்களான பிரேமலால் ஜயசேகர (துறைமுக மற்றும் விமான சேவைகள்), இந்திக்க அனுருத்த (மின்சாரம் மற்றும் எரிசக்தி), மொஹான் பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்) மற்றும் சிறிபால கம்லத் (நெடுஞ்சாலைகள்) ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 47(3)(ஏ) பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி அவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.